கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்ற பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு சென்று கொண்டிருந்த பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உள்ளார்.
வெளிநாடு செல்லும் கணவனை விமான நிலையத்திற்கு விட்டு வீடு திரும்பிய வேளையில் விபத்து ஏற்பட்டுள்ளது.
கிரிபத்கொட ஹுனுபிட்டிய வீதியில் உள்ள பாதசாரி கடவையில் நேற்று இரவு 11.15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் பாரவூர்தியுடன் அதிநவீன கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
காற்று பலூன்கள்
காரின் காற்று பலூன்கள் இயக்கப்பட்டதால் ஓட்டி வந்த பெண் காப்பாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காரின் பின்பக்கத்தில் இருந்த ஒருவர் சிறு காயங்களுடன் கிரிபத்கொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கண்டெய்னரின் வலது புறத்தில் இருந்த எரிபொருள் தொட்டி மீது கார் மோதியது.
பொலிஸார் விசாரணை
கார் பலத்த சேதமடைந்துள்ளதுடன், கார் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து மாகொலவில் உள்ள வீட்டிற்கு சென்று கொண்டிருந்த போது விபத்துக்குள்ளானது.
விபத்துக்குள்ளான கொள்கலன் பாரவூர்தியின் சாரதி தப்பிச் சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் கிரிபத்கொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
![தமிழ் மக்கள் பொதுச்சபை](https://cdn.ibcstack.com/article/112ec360-e1b9-4c9a-92e1-6d909ce10b31/24-6667861299af8-md.webp)
தமிழ் மக்கள் பொதுச்சபை 5 மணி நேரம் முன்
![57 வயதிலும் கலக்கும் நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?... அட இத்தனை கோடியா?](https://cdn.ibcstack.com/article/7c8199d6-667a-4db7-b05e-e9d57a18ed96/24-6667e4204d005-sm.webp)
57 வயதிலும் கலக்கும் நடிகர் விக்ரமின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?... அட இத்தனை கோடியா? Cineulagam
![மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: அவருக்கே ஆபத்தாக முடியுமா?](https://cdn.ibcstack.com/article/6a7c3ac8-f62c-4ff3-8c48-9734ed33be41/24-6667dec2b4d06-sm.webp)
மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி மேக்ரான்: அவருக்கே ஆபத்தாக முடியுமா? News Lankasri
![இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா?](https://cdn.ibcstack.com/article/dc7ca9b8-0991-4904-92c2-a4778dc72ea3/24-6668571b767ad-sm.webp)
இந்த திகதிகளில் பிறந்தவர்கள் மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழும் சாபம் பெற்றவர்கள்... ஏன்னு தெரியுமா? Manithan
![திருமணமான சில மணிநேரத்தில் இறந்த மணமகன்! இரண்டாவது கணவரும் உயிரிழந்ததால் சோகத்தில் ஆழ்ந்த மணமகள்](https://cdn.ibcstack.com/article/553c7b86-69b8-41df-b87a-e146e7cdc5a0/24-666795c688b6a-sm.webp)