இலங்கையை உலுக்கிய பயங்கரம் - வெளிநாட்டிலிருந்து வந்த பெண் கொடூரமாக கொலை
தென்னிலங்கையில் வெளிநாட்டு பெண்ணொருவர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹொரணை உறங்கிக் கொண்டிருந்த படுக்கையில் வைத்து பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலைச் சம்பவம் இன்று அதிகாலை மேவனபலான பிரதேசத்தில் உள்ள சிரில்டன் வத்த பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளது.
வெளிநாட்டு பெண் கொலை
சகோதரியுடன் தங்கியிருந்த பங்களாதேஷ் நாட்டை சேர்ந்த 57 வயதுடைய பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மூன்று வாரங்களுக்கு முன்னர் உயிரிழந்த பெண்ணின் வீட்டில் தங்குவதற்காக சகோதரி வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இறந்த பெண்ணின் சகோதரியின் கைகளை கட்டி வாயில் துணியை திணித்து அறையில் வைத்துவிட்டு கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.