நாடு முழுவதும் மூடப்படும் தபால் நிலையங்கள்: வெளியான அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் எதிர்வரும் 13 ஆம் திகதி காலை முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை (12) நள்ளிரவு 12 மணி தொடக்கம் 13 ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணி தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களும் எதிர்வரும் 13ஆம் திகதி காலை முதல் மூடப்படும் என அதன் அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
அஞ்சல் துறைக்கு பெரும் நெருக்கடி
அஞ்சல் துறை தற்போது பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், சுமார் 2,000 பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளதால், 4 ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் ஆட்சேர்ப்பு இடம்பெறவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஊழியர்கள் அதிக சிரமத்துடன் சேவை செய்ய வேண்டியுள்ளதுடன், மக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது..! 16 மணி நேரம் முன்

SBI சேமிப்பு திட்டத்தில் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்து ரூ.32 ஆயிரம் வட்டியை பெறலாம்.., என்ன திட்டம் தெரியுமா? News Lankasri

இந்த நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் துணையை அடக்கியாள்வதில் வல்லவர்கள்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
