கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இந்திய பெண்கள் - வரலாற்றில் முதன்முறை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை 500 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 50 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வரலாற்றில் இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவால் மூன்று வெளிநாட்டு பயணிகளும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
பெண்கள் கைது
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான பெண்கள் இந்தியாவை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு பெண்களும் மும்பையில் பணிபுரியும் ஆசிரியர்களாகும். 27 வயதுடைய நபர் மும்பையில் உள்ள ஒரு தொலைபேசி நிறுவனத்தில் பணிபுரிவதாக தெரியவந்துள்ளது.
ஆசிரியர்களில் ஒருவர் சந்தேக நபரை திருமணம் செய்தவர் என்பதும், மற்றவர் அவரது சகோதரி என்பதும் தெரியவந்துள்ளது.
போதைப்பொருள்
மூன்று சந்தேக நபர்களும் இன்று காலை 11.07 மணிக்கு தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளனர். அவர்கள் கொண்டு பொதிகளில் போதைப்பொருட்கள் மறைந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

முன்னர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள், கடந்த ஆண்டு வெசாக் போயா நாளில் பிரித்தானிய விமானப் பணிப்பெண் ஒருவர் கொண்டு வந்த குஷ் போதைப்பொருள் ஆகும்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களையும், அவற்றைக் கொண்டு வந்த மூன்று இந்தியர்களையும் மேலதிக விசாரணைக்காக கட்டுநாயக்க விமான நிலைய போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri