தமிழ்நாட்டு முதலமைச்சரின் கருத்து: கண்டனம் வெளியிட்ட அண்ணாமலை
கச்சத்தீவை மீட்பதற்கு இது தான் சரியான சந்தர்ப்பம் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்திற்க்கு வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பில் இன்று (28) பருத்தித்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
உணவை கொடுத்து கிட்னிணையை பிடுங்கும் தமிழ்நாடு
தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடைய செயலானது உணவை அனுப்பி ஒரு மனிதனுக்கு பசியாறிய பின் அவர்களது கிட்னிகளை பிடுங்கி எடுப்பதற்கு சமமானது.
ஒரு வாரத்திற்கு மட்டும் நிவாரணம் வழங்கினால் வடக்கில் உள்ள மக்களோ அல்லது இலங்கையில் வாழும் மக்களோ வாழ முடியுமா என கேள்வியெழுப்பியுள்ளார்.
மேலும், சில நாட்களிற்கு முன்பு தனது உண்டியல் சேமிப்பு பணத்தை இலங்கைக்காக வழங்கிய சிறுமி என செய்தி வெளியிட்டுள்ளீர்கள், அந்த உண்டியல் காசு எத்தனை பேருக்கு பசியாற்றும், எங்களை பார்த்து வேடிக்கை காட்டுகின்றீர்களா எனவும் கேள்வியெழுப்பியுள்ளார்.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam
