நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கஸ்ஸப்ப தேரர்! பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
புதிய இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட குழுவினர் அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தால் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ருவன்வெலிசாய வளாகத்தில் ஏற்பட்ட மோதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
.முதலாம் இணைப்பு
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வணக்கத்திற்குரிய பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உள்ளிட்ட ஏழு பேர் இன்று (26) அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
அநுராதபுரம் ருவன்வெலிசாய விகாரை வளாகத்தில் நீதிமன்ற உத்தரவை மீறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டமை மற்றும் அங்கு ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் கஸ்ஸப்ப தேரர் உட்பட மேலும் ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
இதன்பின்னர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட இக்குழுவினர், இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.

நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.