கரூர் சம்பவம்... த.வெ.க முக்கியஸ்தர் அதிரடி கைது!
தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளரான மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மதியழகன் உள்ளிட்ட ஐவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனிப்படை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 27 அன்று கரூரில் இடம்பெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கிய 41 பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.

விஜய் நள்ளிரவில் திடீர் வெளியேற்றம்! கரூரில் திக்... திக் நிமிடங்கள்... சிக்கப்போகும் முக்கிய புள்ளி
தனிப்படைகள்
குறித்த சம்பவம் தொடர்பில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
விசாரணைகளை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
அத்துடன், பொலிஸார் சார்பில் ஐந்துக்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே, கரூர் மேற்கு மாவட்டச் செயலாளரான மதியழகன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



