தவெக பொதுச் செயலாளரை கைது செய்ய தீவிர நடவடிக்கை
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்தை இன்று இரவுக்குள் கைது செய்ய தமிழ்நாட்டு பொலிஸார் தீவிரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கரூரில் இடம்பெற்ற கூட்டத்தில் ஆபத்துக்கள் நிகழும் என எச்சரித்த பிறகும் அதை கண்டுகொள்ளாமல் இருந்ததாக புஸ்ஸி ஆனந்த் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கலவரத்தில் ஈடுபடுதல், பொது, தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் புஸ்ஸி ஆனந்த் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வழக்கு பதிவு..
மேலும் இந்த வழக்கில், கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன், இணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர் நிர்மல்குமார் ஆகியோரை விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
அதேவேளை, அவர்கள் விசாரணைக்கு வராவிட்டால் கைது செய்து விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தமிழ்நாட்டு பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில், அவர்களை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே தலைமறைவாக உள்ள கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகனை பொலிஸார் தீவிரமாக தேடி வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

விஜய் கைது செய்யப்படுவாரா! முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த பதில்: மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பெரும் பரபரப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



