கருணாரத்ன பரணவிதானகே எம்.பியாகப் பதவிப்பிரமாணம்
கருணாரத்ன பரணவிதானகே ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் உறுப்பினரான சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஏட்டிலும் அவர் கையொப்பமிட்டார்.
பதவி விலகல்
ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி இரத்தினபுரி மாவட்ட நாடளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றிய தலதா அத்துகோரல நாடாளுமன்ற உறுப்பினர் பதவி விலகல் செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே கருணாரத்ன பரணவிதானகே நியமிக்கப்பட்டுள்ளார்.
கருணாரத்ன பரணவிதானகே எட்டாவது நாடாளுமன்றத்தில் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியிருந்ததுடன், அந்தக் காலப்பகுதியில் வெகுஜன ஊடக மற்றும் நாடாளுமன்ற விவகார, திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி, உள்ளூராட்சி மன்றம் போன்ற அமைச்சுக்களின் பிரதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





ஹிந்தி - பௌத்த சிங்களம் இரட்டையர் நாகரிகம்! 18 மணி நேரம் முன்

மீனாவிடம் மன்னிப்பு கேட்ட ரோஹினி, அருண் பற்றிய உண்மையை கூறிய முத்து.. சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam

சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri
