அரசியல் சீர்திருத்தங்கள் தொடர்பில் கரு ஜயசூரிய விடுத்த கோரிக்கை
இலங்கை தற்போது எதிர்நோக்கி வரும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை உடனடியாக முடிவுக்கு கொண்டு வருவது, அனைத்து அரசியல் சக்திகள் மற்றும் குடியியல் சமூகத்தின் பிரதான பொறுப்பு என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் விரும்பும் முக்கிய அரசியல் சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதற்கான பொறுப்பு தற்போது நாடாளுமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
எனவே காலதாமதமின்றி, அந்த நடவடிக்கைகளை மக்களின் நம்பிக்கைக்கு வழிவகுக்கும் வகையில் செயல்படுத்துவது அவசியம்.
கோரிக்கை

இந்த முடிவை அடைய பொதுமக்கள் அமைதியாகவும் உறுதியுடனும் இருப்பது மிகவும் முக்கியம். எனவே ஜனநாயக மரபுகளுக்கு ஏற்ப அனைத்து தரப்பினரும் அமைதியாக செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தின் அனைத்து பொறுப்புள்ள தரப்பினரும் மக்களின் குரலுக்கு செவிசாய்ப்பது மிகவும் அவசியமாகும் என்றும் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய கேட்டுள்ளார்.
| இலங்கையின் தற்போதைய நிலை தொடர்பில் அமெரிக்கத் தூதுவர் விசேட வேண்டுகோள் |
| தமக்குத் தாமே சூனியம் வைத்துக்கொண்ட சிங்கள மக்கள் |