சிறையில் போடும் அளவிற்கு நான் கெட்ட மனிதன் அல்ல புலம்பும் திலித்
சிறையில் அடைக்கும் அளவிற்கு தாம் ஒன்றும் கெட்ட மனிதர் அல்ல என சர்வஜன பலய கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சரியான ஓர் எதிர்க்கட்சி
அரசாங்கத்தின் நல்லது கெட்டது என்பனவற்றை மிகவும் வெளிப்படை தன்மையுடன் சுட்டிக்காட்டும் ஓர் நியாயமான எதிர்கட்சியே நாம் என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென சில தரப்பினரால் கூறப்பட்டாலும் தாம் அவ்வாறு குற்ற செயல்களில் ஈடுபட்ட நபர் அல்ல என திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டை வீழ்ச்சி அடைய செய்து ஆட்சியை கைப்பற்ற நினைத்தது கிடையாது எனவும் ஜனநாயக ரீதியில் ஆட்சியை கைப்பற்றவே விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தை மிகவும் நியாயமான முறையில் விமர்சனம் செய்து சரியான ஓர் எதிர்க்கட்சியாக செயற்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.