காரைநகர் – ஊர்காவற்துறை கடற்பாதை போக்குவரத்து மீண்டும் ஆரம்பம் (Photos)
காரைநகர் - ஊர்காவற்துறை கடற்பாதை சேவை மீண்டும் வழமைக்கு திரும்பி உள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
குறித்த கடற்பாதையானது கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கடலில் உடைந்து விழுந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கடற்பாதையின் புனரமைப்பு பணிகள் கடந்த சனிக்கிழமை நிறைவுற்ற நிலையில் இன்று (10.07.2023) திங்கட்கிழமையில் இருந்து வழமையான நேர அட்டவணையின் படி கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பல தடவைகள் புனரமைப்பு பணிகள்
கடற்பாதையானது பழுதடைந்தமையின் காரணமாக காரைநகரில் இருந்து ஊர்காவற்துறைக்கும், ஊர்காவற்துறையில் இருந்து காரைநகருக்கும் பயணம் செய்யும் அரச உத்தியோகத்தர்கள், அன்றாட தொழிலாளர்கள், மாணவர்கள், நோயாளிகள்,பொதுமக்கள் உட்பட பலர் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த கடற்பாதையானது பல தடவைகள் கோளாறுக்கு உள்ளாகி திருத்தம் செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ட்ரம்பால் அறிவிக்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் போர்நிறுத்தம்: பிரதமரிடம் விளக்கம் கேட்கும் எதிர்க்கட்சிகள் News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
