காரைநகர் திண்ணபுரம் சிவன் ஆலயம்: எழுந்துள்ள புதிய சர்ச்சை
இந்துக்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக்கொள்ள வேண்டும் என மாவிட்ட புரம் முருகன் ஆலய ஆதீன குருரத்தின சபாபதி குருக்கள் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நாவலர் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
காரைநகர் திண்ணபுரம் சிவன் ஆலயம்
”வரலாற்று பிரசித்தி பெற்ற காரைநகர் திண்ணபுரம் சிவன் ஆலயத்தினை பாலஸ்தாபனம் செய்வதா திருவம்பாவை உற்சவத்தினை நடத்துவதா என்பது தொடர்பில் எழுந்த சர்ச்சையினால் நீதிமன்றத்தினை நாடி நீதிமன்றத்தினால் மாவிட்ட புரம் பிரதம குரு மற்றும் மேலும் சில குருமாரை நேரில் சென்று ஆராய்ந்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஊர்காவற்துறை நீதிமன்றினால் கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காரைநகர் ஈழத்து சிதம்பர ஆலய நிலைமை தொடர்பில் நேரில் சென்று ஆராய்ந்து அங்கு நிலைமைகளை அவதானித்து மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கட்டளையிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரம் நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டியுள்ளது.
கோரிக்கை
எனவே இந்து மக்களுக்கு நான் ஒரு கோரிக்கையினை முன்வைக்க விரும்புகின்றேன். எமது இந்து கோயில்களில் அல்லது எமது இந்து மக்களுக்கு இடையிலான பிரச்சினையினை நாங்களே தீர்க்க வேண்டும். அடுத்தவரிடமோ அல்லது நீதிமன்றத்திற்கோ அல்லது வேறு தரப்பிடமோ நாங்கள் செல்லக்கூடாது.
இந்த விடயத்தினை நாங்கள் இந்து மக்களாகிய அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். வரலாற்று பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற தலமான ஈழத்து சிதம்பரத்தில் இவ்வாறான நிலைமை இருக்கின்றது. எனவே எமது இந்து மக்களுக்கிடையில் உள்ள பிரச்சினைகளை நாங்களே தீர்க்க வேண்டும் என்பது எனது கோரிக்கையாகும்” என்றார்,
May you like this Video





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
