கபில சந்திரசேனவின் மனைவியின் பிணை விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
எயார்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்தம் தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மனைவி பிரியங்கா நியோமாலி விஜேநாயக்கவின் பிணையாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அவருக்காக தலா ரூ. 20 மில்லியன் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளை (மொத்தம் ரூ. 40 மில்லியன்) முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்காவும் வழங்கியிருந்தனர்.
பிரியங்கா நயோமாலிக்கு பிடியாணை
எயார்பஸ் விமான கொள்வனவு ஒப்பந்த விவகாரத்தின் இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நயோமாலிக்கு ஏற்கனவே பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் முதல் சந்தேகநபரான முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன ஏற்கனவே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், சந்தேகநபர் நீதிமன்றத்தை புறக்கணித்ததால், முழு பிணைத்தொகையையும் செலுத்துமாறு கோட்டை நீதவான் பாசன் அமரசேன உத்தரவிட்டார்.
இதன் முதற்கட்டமாக கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி ரூ. 20 மில்லியனை செலுத்தியிருந்த அரவிந்த டி சில்வா தம்பதியினர், எஞ்சிய ரூ. 20 மில்லியனை அக்டோபர் நேற்று (07) திகதி நீதிமன்றத்தில் செலுத்தியுள்ளனர்.
வெளிநாடு செல்ல அனுமதி
இந்நிலையில், முழுத்தொகையையும் செலுத்தி முடித்ததையடுத்து, பிணையாளர்கள் என்ற பொறுப்பில் இருந்து அரவிந்த டி சில்வாவும் அவரது மனைவியும் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெளிநாடு செல்ல வேண்டியிருப்பதால் பிரியங்கா நியோமாலியின் பிணையாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்குமாறு முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா மற்றும் அவரது மனைவி பிரியங்கி அனுஷ்கா விஜேநாயக்க ஆகியோர், சட்டத்தரணி ஊடாக கோரிக்கை விடுத்திருந்த நிலையில் இந்த உததரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரவிந்த டி சில்வாவின் மனைவியும், கபில சந்திரசேனவின் மனைவியும் சகோதரிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெறிக்கும் மண்டாடி பட வசூல் வேட்டை... நடிகர் சூரி ரசிகர்களுக்கு வெளியிட்ட இன்ப அதிர்ச்சியான தகவல் Cineulagam
காலையில் வெறும் வயிற்றில் 2 பேரீச்சம்பழங்கள் - உடலில் நடக்கும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா? Manithan
Flydubai தாக்குதல் சம்பவம்... விமானி ஸ்மித் மச்சாரை காப்பாற்றியதை வெளிப்படுத்திய பல் மருத்துவர் News Lankasri