கபில சந்திரசேனவின் திடீர் மரணத்தில் தொடரும் மர்மம் - தனியார் வைத்தியசாலையின் செவிலியர் வழங்கிய வாக்குமூலம்
ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பில் இதுவரை 10 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்கு எயார்பஸ் விமானங்களை கொள்வனவு செய்யும் போது பல டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கபில சந்திரசேனவிற்கு எதிராக விசாரணை இடம்பெற்று வரும் நிலையில், கொள்ளுப்பிட்டியவில் உள்ள வீட்டில் இருந்து (08) திகதி சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.
நீதவான் விசாரணை
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான நீதவான் விசாரணை, கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் நேற்று (19) இடம்பெற்றபோது சாட்சிகளாக சிலர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கபில சந்திரசேனவின் மரணம் நிகழ்ந்த போது சம்பவ இடத்திற்குச்சென்றிருந்த தனியார் வைத்தியசாலையில் செவிலியர் தனது சாட்சியத்தில் பின்வருமாறு கூறியுள்ளார்:
“ஐயா, 8ஆம் திகதி காலை சுமார் 7.45 மணியளவில் வீடொன்றில் சுயநினைவின்றி நோயாளி ஒருவர் இருப்பதாக வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு ஒரு அழைப்பு வந்தது. இதனையடுத்து நாங்கள் தொலைபேசி எண்ணை பெற்று நோயாளியின் விபரங்களைப் பதிவு செய்தோம். அவரது பெயர் கபில சந்திரசேன.
சாரதி, ஆம்புலன்ஸ் உதவியாளர், நான் மற்றும் வைத்தியர் என நாங்கள் நான்கு பேர் அங்கு சென்றோம்.நாங்கள் வீட்டிற்குச்சென்ற பிறகு, வாசலுக்கு வந்த ஒருவர் தான் ஒரு வழக்கறிஞர் என்று கூறினார்.
வைத்தியர் பரிசோதனை
இதன்பின்னர் நாங்கள் வீட்டிற்குள் சென்றோம். அவர்கள் எங்களை மாடிக்கு அழைத்துச் சென்றனர். எங்கள் சாரதி மேலே வரவில்லை. அவர் முதல் மாடியில் இருப்பதாகவும், விளக்குகள் அணைக்கப்பட்டிருந்ததாகவும், நோயாளியைக் காட்டினார்கள். அந்த அறையில் இருந்த படுக்கையில் ஒரு பை இருந்தது.

அறையின் ஓரத்தில் தரையில் மண்டியிட்ட நிலையில் ஒருவர் படுத்திருந்தார். அங்கே ஒரு நாற்காலி இருந்தது. அவரது முகம் அந்த நாற்காலியில் இருந்தது. நான் அந்த நபரை பார்த்த போது அவரது கழுத்தில் ஒரு பெல்ட் இருந்தது. அப்போது, எங்கள் வைத்தியர் அவரை பரிசோதித்துவிட்டு, அவர் உயிருடன் இல்லை என்று கூறினார்.
அவரது படுக்கையில் துணிப்பையை பார்த்தேன். அதில் இரத்தச்சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் சில மாத்திரைகள் இருந்தன. ஒரு அடையாள அட்டை இருந்தது. மேசையில் ஒரு தொலைபேசி இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன்பின்னர் நான் எங்கள் நிர்வாக அதிகாரியிடம் தகவல் தெரிவித்தேன். நிர்வாக அதிகாரி பொலிஸார் மற்றும் தடயவியல் மருத்துவருக்கு தகவல் தெரிவிக்குமாறும் என்னிடம் கூறினார். அப்போது காலை சுமார் 8:15 மணியாக இருந்தது. அதன்படி செயல்பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கருப்புப்பட்டியலில் சேர்க்கப்படவுள்ள ஆயிரக்கணக்கான வாகனங்கள்! சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஈஸ்டர் தாக்குதலை அடுத்து சிறையில் பிள்ளையானை சந்தித்த ராஜபக்சர்கள்! திடுக்கிடும் பல உண்மைகள் அம்பலம்
மகிந்த மட்டும் அந்த இருவரின் பேச்சைக் கேட்டிருந்தால் இன்று ஈழம் மலர்ந்திருக்கும்..! போர்க் கால இரகசியங்கள் கூறும் சரத் வீரசேகர
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சுரேஷ் சலே - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
அறிகுறிகள் வெளிப்படாமல் இருக்கலாம்! இலங்கையில் திருமணம் செய்ய காத்திருப்போருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
முத்துவேலுக்கு புற்றுநோய் என தெரிந்ததும் பாண்டியன் செய்த காரியம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
டெக்சாஸ் தடுப்புக்காவலில் 90 நாட்களாக அடைக்கப்பட்டுள்ள இந்திய குடும்பம்: சிதையும் குழந்தைகள் கனவு News Lankasri
கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam