12 ஆம் திகதி மகிந்த விசாரணைக்கு வரவிருந்த நிலையில் நடந்த அதிர்ச்சி! அம்பலமாகும் பல விடயங்கள்
ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இரண்டு நாட்களுக்கு முன்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட சந்திரசேனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் வியாழக்கிழமை (07) உத்தரவிட்டிருந்த நிலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை (05) கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கியது.
அப்போது, 500,000 ரூபாய் ரொக்கப் பிணை மற்றும் தலா 1 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளில் அவரை விடுவிக்க நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்காக இரு நபர்களுக்கு தலா 15,000 ரூபாய் பணம் வழங்கி, அவர்களை பிணையாளர்களாக முன்னிறுத்தியதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
அதனை தொடர்ந்து இன்றையதினம்(8) அவரை கைது செய்ய சென்றபோதே இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
மேலும், கபில சந்திரசேனவிற்கு பிணை வழங்க கையெழுத்திட்டவர்களும் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.
இந்த தகவல்களை விரிவாக பேசுகின்றது லங்காசிறியின் Newsinsighttamil நிகழ்ச்சி...
விஜய் தமிழக முதலமைச்சராவதில் தொடரும் சிக்கல்! ஆதரவு தெரிவித்ததாக தெரிவித்து இறுதியில் கைவிரித்த ஐயுஎம்எல்