எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்க ஆதரவு! ஆளுநரிடம் கடிதம் வழங்கிய டி.டி.வி. தினகரன்

Vijay Edappadi K. Palaniswami TTV Dhinakaran Thamizhaga Vetri Kazhagam TVK
By Shadhu Shanker May 08, 2026 07:20 PM GMT
Report

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்துள்ளார். அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

தவெகவிற்கு அதிகாரப்பூர்வ ஆதரவு தெரிவிக்காத நிலையில் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்..!

தவெகவிற்கு அதிகாரப்பூர்வ ஆதரவு தெரிவிக்காத நிலையில் மு.க.ஸ்டாலினை சந்தித்த திருமாவளவன்..!

ஆளுநர் அழைக்காதது சர்ச்சை

தி.மு.க. கூட்டணி 73 இடங்களிலும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

தமிழக வெற்றிக்கழகம் தேர்தலில் வெற்றி பெற்றாலும், ஆட்சியமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்க ஆதரவு! ஆளுநரிடம் கடிதம் வழங்கிய டி.டி.வி. தினகரன் | Edappadi Take Oath Chief Minister Ttv Dinakaran

காங்கிரஸ், வி.சி.க. இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இதில், த.வெ.க.வுக்கு 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கிடைத்தது. கம்யூனிஸ்டு கட்சிகளின் ஆதரவு கிடைத்தபோதும் போதிய பெரும்பான்மை கிடைக்காமல் உள்ளது.

த.வெ.க., தனிப்பெரும் கட்சியாக உள்ளபோதும், அக்கட்சியை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதது சர்ச்சையானது.

விஜய் தமிழக முதலமைச்சராவதில் தொடரும் சிக்கல்! ஆதரவு தெரிவித்ததாக தெரிவித்து இறுதியில் கைவிரித்த ஐயுஎம்எல்

விஜய் தமிழக முதலமைச்சராவதில் தொடரும் சிக்கல்! ஆதரவு தெரிவித்ததாக தெரிவித்து இறுதியில் கைவிரித்த ஐயுஎம்எல்

விஜய்யிடம் பெரும்பான்மை

இந்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநர் அர்லேகர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலில், 118 இடங்கள் இல்லாமல் ஆட்சி அமைக்க அழைக்க முடியாது. ஆனால் விஜய்யிடம் எந்த பெரும்பான்மையும் இல்லை.

விஜய் ஆட்சி அமைப்பதை நான் தடுப்பதாக எப்படி சொல்ல முடியும்? விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை.

எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்க ஆதரவு! ஆளுநரிடம் கடிதம் வழங்கிய டி.டி.வி. தினகரன் | Edappadi Take Oath Chief Minister Ttv Dinakaran

அடுத்த 2 அல்லது 3 நாட்களில் முடிவு எட்டப்படாவிட்டால் அடுத்த கட்ட முடிவுகள் குறித்து ஆலோசிப்பேன். தி.மு.க. - அ.தி.மு.க. சேர்ந்து ஆட்சி அமைக்க உரிமை கோரினாலும் சாத்தியம்தான் என்று கூறினார்.

இந்த சூழலில், எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்க ஆதரவளிப்பதாக மன்னார்குடி தொகுதியில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எஸ்.காமராஜ் கடிதம் அளித்துள்ளார்.

அதனை அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கவர்னரை நேரில் சந்தித்து வழங்கியுள்ளார்.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
நன்றி நவிலல்

நட்டாங்கண்டல்

14 Apr, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு

09 May, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், நுவரெலியா

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுதுமலை வடக்கு, கம்பஹா வத்தளை

14 May, 2020
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, சித்தன்கேணி

14 May, 2014
நன்றி நவிலல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி

செட்டிக்குளம், London, United Kingdom

13 May, 2013
13ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
24ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒமந்தை, தாண்டிக்குளம்

14 May, 2002
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, London, United Kingdom

24 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், களுவாஞ்சிக்குடி, கொழும்பு

14 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, இத்தாலி, Italy, திருவையாறு

04 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், வெள்ளாம்போக்கட்டி, புளியம்பொக்கணை, வவுனியா, கொழும்பு

11 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

12 May, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aarau, Switzerland

13 May, 2024
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Kent, United Kingdom

09 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Cergy-Pontoise, France

08 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US