கபிலவின் மரணத்தில் தொடரும் மர்மம்!
சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் குறித்து கொழும்பு-கோட்டை நீதிமன்றத்திலே பல்வேறு விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.
முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வா வசிக்கின்ற பகுதியில் அதிகமான செல்வந்தர்கள் வாழுகின்ற ஒரு இடமாக காணப்படுகின்றது.அதேபோன்று தான் அவரது வீடும் சகல வசதிகளுடனும் காணப்படுகின்றது.
இந்நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் இல்லத்தில் உள்ள சிசிடிவி கமரா அமைப்பிலிருந்து எந்த தரவுப்பதிவுகளும் கிடைக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்ட காலமாகவே குறித்த சிசிடிவி கமரா அமைப்பில் எந்தவொரு தரவுகளும் பதிவாகவில்லை எனவும் விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
மேலும், கபில சந்திரசேன தங்கி இருந்த இல்லத்திற்கு செல்லும் மற்றும் வெளியேறும் வழிகளைக் கொண்ட அயல் வீடுகளில் உள்ள சிசிடிவி பதிவுகள் அனைத்தும் பொலிஸாரால் பொறுப்பேற்க்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பான விரிவான தகவல்களை நியூஸ் இன்சைட் நிகழ்ச்சியில் காணலாம்.
கபில சந்திரசேனவின் விவகாரம்! அறையில் கண்டுபிடிக்கப்பட்ட வங்கி அட்டை - பணிப்பெண் வழங்கிய முக்கிய வாக்குமூலம்
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri