உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு அழைக்கப்படாத உலக்கோப்பையை வென்ற முன்னாள் அணித்தலைவர்
அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்கு தனக்கு அழைப்பு வரவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் தலைவர் கபில்தேவ் தெரிவித்துள்ளார்.
1983இல் இந்தியாவை அவர்களின் முதல் உலகக் கிண்ணப் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற கபில், இன்று தம்முடன் விளையாடிய வீரர்களுடன் விளையாட்டைப் பார்ப்பதற்கு செல்ல விரும்பியதாக கூறியுள்ளார்.
கபில் தேவின் நிறைவேறாத விருப்பம்
தாம் 2023 உலக கிண்ணப்போட்டியை நேரில் பார்க்கும் போது தம்முடன் 1983ஆம் ஆண்டின் அணியினர் இருக்கவேண்டும் என்று தாம் விரும்பியதாகவும் கபில் தேவ் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் 'நான் அங்கு அழைக்கப்படவில்லை . அவர்கள் என்னை அழைக்கவில்லை, அதனால் நான் செல்லவில்லை. இது ஒரு பெரிய நிகழ்வு மற்றும் மக்கள் பொறுப்புகளைக் கையாள்வதில் மிகவும் அவசரத்தில் இருந்திருப்பார்கள்.
எனவே சில சமயங்களில் அவர்கள் தம்மை மறந்திருப்பார்கள் என்று கபில் ஏபிபி நியூஸிடம் கூறியுள்ளார்.
இதேவேளை உலகக்கிண்ண கிரிக்கட் 2023 போட்டியை பிரதமர் மோடி, திராவிட முன்னேற்றக்கழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, நடிகர்கள் ஷாருக் கான், தீபிகா படுகோனே மற்றும் ரன்வீர் சிங் ஆகியோரும் நேரில் பார்க்க சென்றிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |