மகிந்தவின் பிறந்த தினத்தை கோலாகலமாக கொண்டாடிய யாழ். தமிழ் இளைஞர்கள் (Video)
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்ததினத்தினை யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர்கள் வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளனர் என இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த காணொளி ஒன்றினை பகிர்ந்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்ததினம் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது.
பிறந்தநாள் நிகழ்வுகள்
கட்சி ஆதரவாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், அவரது தீவிர விசுவாசிகள் என்று மகிந்தவின் பிறந்ததினத்திற்காக பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்தநிலையில், யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ் இளைஞர்கள் சிலர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்ததினத்தினை வெகு விமர்சையாக கொண்டாடியுள்ளதாக காணொளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது தொடர்பான காணொளிகளை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
