காங்கேசன்துறை - நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை மீண்டும் ஆரம்பம்
பருவகால மழை மற்றும் பராமரிப்பு மணிபளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை - நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச்சேவையானது இன்று மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து நேற்று காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறை நோக்கி புறப்பட்டுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகம்
அது மதியம் 2.00 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தினை வந்தடைந்தது பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து 92 பயணிகளுடன் 3.00 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கி பயணத்தினை ஆரம்பித்துள்ளது.

ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி பருவகால மழை மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த சிவகங்கை பயணிகள் படகானது சுமார் நான்கு மாதங்களின் பின்னர் சேவையினை ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.
வாரத்தில் செவ்வாய் தவிர்ந்த 6 நாட்களும் சேவை இடம்பெறும் இருவழிக்கட்டணமாக 28500 இலங்கை ரூபாய் அறவிடப்படுகின்றது.
உத்திரம் நட்சத்திரத்தில் நுழையும் சுக்கிரன்: இந்த 4 ராசிகளுக்கு சவாலான காலமாக இருக்கும் ஜாக்கிரதை! Manithan