யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு

Jaffna Sri Lankan Peoples Tourism Ship Nagapattinam
By Theepan Dec 15, 2024 10:03 AM GMT
Report

காங்கேசன்துறைக்கும் நாகப்பட்டினத்துக்கும் இடையிலான படகுசேவை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் வாரத்துக்கு ஆறுநாட்கள் மேம்பட்ட வசதிகளுடன் ஆரம்பமாகவுள்ளதாக காங்கேசன்துறை, நாகை  படகுசேவை முதலீட்டாளர் பொன்னுசாமி சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று(14) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்

கனடா நோக்கிப் பயணமாகியுள்ள சிறீதரன்

தற்காலிக  சேவை 

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

கடந்த ஒகஸ்ட் மாதம் இந்த படகுசேவை ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் காலநிலை முன்னெச்சரிக்கையின் காரணமாக தற்காலிகமாக சேவை நிறுத்தப்பட்டிருந்தது.

இம்மாதம் 23ஆம் திகதி வங்களா விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகுவதற்கான நிலைமைகளும் உள்ளன. இதனால் 19ஆம் திகதி மீண்டும் ஆரம்பிப்பதற்கு ஏற்பாடாகியிருந்த படகு சேவையை சிறிய காலத்திற்கு ஒத்திவைத்துள்ளோம்.

இந்நிலையில் எதிர்வரும் ஜனவரியில் மீண்டும் காங்கேசன்துறைக்கும் நாகைப்பட்டனத்துக்கும் இடையிலான படகுசேவை ஆரம்பிக்கப்படவுள்ளதோடு இதனை சுபம் நிறுவனமே நேரடியாக கையாளப்போகின்றது.

மனித பாவனைக்கு உதவாத அரிசி இறக்குமதி! திருப்பி அனுப்ப நடவடிக்கை

மனித பாவனைக்கு உதவாத அரிசி இறக்குமதி! திருப்பி அனுப்ப நடவடிக்கை

மீள் ஆரம்பம்

நாங்கள் படகுசேவையை கடந்த மூன்று மாதகாலத்தில் முன்னெடுத்த போது சிறுசிறு சறுக்கல்களும் காணப்பட்டுள்ளன. எனினும் அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்புக்களுடன் சிறப்பாக எமது சேவையை கடந்த காலத்தில் முன்னெடுக்க முடிந்திருந்தது.

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Kankesanthurai Nagai Ferry Resumes January

மீள படகுசேவை ஆரம்பிக்கப்படும்போது, சில மேம்பட்ட வசதிகளை முன்னெடுத்துள்ளோம். முக்கியமாக சுற்றுலாப்பயணிகளை அதிகரிக்கும் நோக்கத்தில் பயணக்கட்டணங்களை மாற்றியமைத்துள்ளோம். தற்போது இருவழிக் கட்டணமாக 9700 இந்திய ரூபா அறவிடப்படுகின்றது.

அதனை நாம் 8500இந்திய ரூபாவாக மாற்றியமைப்பதோடு பத்து கிலோகிராம் எடையுடைய பொதியையும் இலவசமாகக் கொண்டுவர முடியும். மேலதிகமாக அதிக எடையுடைய பொதிகளை கொண்டுசெல்வதாக இருந்தால் அதற்கான மேலதிக கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளது.

அதற்கான தொகைகள் எமது உத்தியோகபூர்வமான இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. பயணப்பொதிகளுக்கான முற்பதிவுகளை இணையத்தின் ஊடாக மட்டுமே மேற்கொள்ள முடியும். அதேநேரம், நாகப்பட்டினத்தில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் அதிகாலையிலேயே வருகை தருவதாலும், அதேபோன்று காங்கேசன்துறையில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் பயணிகள் முற்பகலில் பயணத்தை ஆரம்பிப்பதாலும் அவர்களுக்கான உணவுத்தேவையை பூர்த்திசெய்வதில் நெருக்கடிகள் இருந்தன.

மகளிர் ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் இன்று

மகளிர் ஐ.பி.எல் தொடருக்கான ஏலம் இன்று

குறைந்த செலவில் பயணம்

இதனால் நாம் காலையில் இட்லி, பொங்கல், போன்ற உணவுகளையும் நண்பகலில் மரக்கறி பிரியாணி போன்ற மாறுபட்ட உணவுகளையும் பயணக்கட்டணத்துக்கு உட்பட்டதாகவே வழங்கவுள்ளோம். அதேபோன்று, நேரடியாக வருவிக்கப்பட்ட பசும்பாலை பயன்படுத்தி தேநீர் மற்றும் கோப்பி ஆகியவற்றையும் குளிர்பாணங்களையும் இலவசமாக வழங்கவுள்ளோம்.

யாழ். காங்கேசன்துறை - நாகப்பட்டினம் கப்பல் சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு | Kankesanthurai Nagai Ferry Resumes January  

மேலும், வரிச்சலுகையுடன் பொருட்கள் விற்பனை நிலையமொன்றையும் படகில் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தினை அடைந்துள்ளது. சுபம் நிறுவனம் நேரடியாகவே படகுசேவையை கையாளுவதன் காரணமாக பயணச்சீட்டுக்கள் மற்றும் குறுகிய பயணத்திட்டங்களை மையப்படுத்திய புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. 

அந்த இணையத்தளத்தில் குறுகிய பயணத்திட்டங்கள் முன்மொழியப்பட்டுள்ளன. உதாரணமாக, இரண்டு இரவு மூன்று பகல் தங்குமிட மற்றும் உள்ளக போக்குவரத்து வசதிகளுடன் காணப்படுகின்றது.

இதற்கான தொகை இந்திய ரூபாவில் 15ஆயிரமாக காணப்படுவதோடு இலங்கை ரூபாவில் 50ஆயிரம் வரையில் இருக்கின்றது. இவ்விதமான திட்டங்கள் நடுத்தர பயணிகளை மையப்படுத்தியதாகவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குறைந்த செலவில் சுற்றுலாப்பயணிகள் பயணங்கள் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்களை நாங்கள் ஏற்பாடு செய்துள்ளதோடு தொடர்ச்சியான படகுசேவையை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளோம் என்றார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW           

1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் புதுறோடு, Wembley, United Kingdom

23 Mar, 2024
மரண அறிவித்தல்

இறக்குவானை, கந்தர்மடம், யாழ்ப்பாணம்

07 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பளை

11 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தொல்புரம், அராலி, Toronto, Canada

09 Apr, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Mississauga, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, London, United Kingdom

06 Apr, 2020
மரண அறிவித்தல்

சில்லாலை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், கனடா, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்

வேம்படி தாளையடி, Vejle, Denmark

31 Mar, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, Toronto, Canada

10 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

31 Mar, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

03 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், கொழும்பு

01 Apr, 2015
12ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, மட்டக்களப்பு

10 Apr, 2013
மரண அறிவித்தல்

குடத்தனை, வராத்துப்பளை, Montreal, Canada, Cornwall, Canada

07 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Newmarket, Canada

07 Apr, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Brampton, Canada

02 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Pontoise, France

05 Apr, 2025
மரண அறிவித்தல்

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Witten, Germany

08 Mar, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
மரண அறிவித்தல்

நவிண்டில், சுழிபுரம், London, United Kingdom

27 Mar, 2025
மரண அறிவித்தல்

Euskirchen, Germany, Coventry, United Kingdom

01 Apr, 2025
மரண அறிவித்தல்

London, United Kingdom, Hayling Island, United Kingdom

19 Mar, 2025
கண்ணீர் அஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொழும்பு

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Muscat, Oman, Toronto, Canada

05 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Le Bourget, France

04 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US