அநுர ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு இடம் கிடையாது..! கந்தசாமி பிரபு பகிரங்கம்

Namal Rajapaksa Sri Lanka Politician Sri Lankan Peoples Sri Lanka Government NPP Government
By Kumar Sep 21, 2026 10:34 PM GMT
Report

கடந்த காலங்களிலே நீதிபதிகளைத் தங்களுக்குச் சார்பான தீர்ப்புகளை வழங்குமாறு பல அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று எந்தவொரு அரசியல் அழுத்தமும் கிடையாது.

அத்துடன், அநுர அரசாங்கத்தில் நீதிபதிகள் சுதந்திரமான கட்டமைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். அதன் வெளிப்பாடுகள் தான் இன்று கைதுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அதிகாரத்தை பயன்படுத்தி தப்பிய அரசியல்வாதிகள்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற கைதுகள் தொடர்பாக எதிர்க்கட்சியினர் பலவிதமான கருத்துக்களை மக்கள் மத்தியிலே குறிப்பிட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த விசாரணைகள் தொடர்பாக இவர்கள் இதற்கு முன்னர் பல தடவைகள் விசாரணை அதிகாரிகளிடம் சென்று, தங்களது வாக்குமூலங்களைப் பதிவு செய்திருந்தார்கள். இது நேற்றோ அல்லது அதற்கு முந்தைய தினமோ இடம்பெற்ற விசாரணை கிடையாது.

அநுர ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு இடம் கிடையாது..! கந்தசாமி பிரபு பகிரங்கம் | Kandasamy Prabhu S Criticism Anura Government

மிக நீண்ட காலமாக இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்திருந்தன. ஆனால் இவர்கள் ஏதோ ஒரு காரணத்தை அல்லது தங்களது இருக்கின்ற அரசியல் பலத்தைப் பயன்படுத்திக் கொண்டு தப்பித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இன்று, இந்த சட்டங்கள் பொதுவானதாகவும் மக்களுக்கு சுயாதீனமாகவும் சுதந்திரமாகவும் செயல்படுகின்ற ஒரு சட்டக் கட்டமைப்பை நாங்கள் இன்று உருவாக்கியிருக்கின்றோம்.

பொலிஸார், சுயாதீனமாகத் தங்களது விசாரணைகளை முன்னெடுத்துக் கொண்டு வருகின்றார்கள். விசாரணை அதிகாரிகளுக்கு எந்தவொரு அழுத்தத்தையும் நாங்கள் பிரயோகிக்கவில்லை.

அரசியல் பழிவாங்கல் கிடையாது..

அரசியல் அழுத்தங்கள் இல்லாத ஒரு கட்டமைப்பை நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம். அரச அதிகாரிகள் தங்களது செயல்பாடுகளைச் சுதந்திரமாக இன்று செயல்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இதிலே நீதிப் பிரிவை நாங்கள் விசேடமாகக் குறிப்பிட வேண்டும். கடந்த காலங்களிலே நீதிபதிகளைத் தங்களுக்குச் சார்பான தீர்ப்புகளை வழங்குமாறு பல அரசியல் அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. ஆனால் இன்று எந்தவொரு அரசியல் அழுத்தமும் கிடையாது. அவர்கள் நீதியாக, சுதந்திரமான கட்டமைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அநுர ஆட்சியில் அரசியல் பழிவாங்கலுக்கு இடம் கிடையாது..! கந்தசாமி பிரபு பகிரங்கம் | Kandasamy Prabhu S Criticism Anura Government

இந்த விசாரணைகளை அவர்கள் விசாரித்து, அதன் வெளிப்பாடுகளைத் தான் இன்று கைதுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. ஆகவே இதிலே எந்தவொரு அரசியல் பழிவாங்கலும் கிடையாது.

இந்தக்க கைதுகள் விசாரணை அடிப்படையிலேயே தான் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. அது யாராக இருந்தாலும், எவராக இருந்தாலும், தங்களது ஊழலுக்கு எதிராக அவர்கள் மேற்கொண்ட அநீதிக்கு எதிரான விசாரணை சுயாதீனமாக, சுதந்திரமாக இடம்பெற்று அதற்கான தண்டனைகள் இப்போது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்றார். 

அனோஜன் விவகாரத்தில் அநுர தீவிரம் - நாளை வெளியாகும் வரலாற்று தீர்ப்பு!

அனோஜன் விவகாரத்தில் அநுர தீவிரம் - நாளை வெளியாகும் வரலாற்று தீர்ப்பு!

பைடனை குறிவைத்து ட்ரம்ப் தீவிர பிரசாரம் - மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பு

பைடனை குறிவைத்து ட்ரம்ப் தீவிர பிரசாரம் - மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பு


மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US