எதிர்கட்சி தலைவரை கடுமையாக விமர்சித்த கந்தசாமி எம்பி
எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு கடுமையாக விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தெரிவிக்கையில், "வீடு வீடாக சென்று கிராமம் பூராகவும் சென்று தன்னிடம்தான் திட்டங்கள் இருப்பதாகவும் தன்னால் மாத்திரம் தான் இவற்றை செயல்படுத்த முடியும் என தெரிவித்திருந்தார்.
சஜித்தின் கருத்துக்கள்
ஆனால், அவர் செலவிட்ட நிதிகளை ஒப்பிட்டு பார்க்கின்ற போது பல நிதி மோசடிகள் அதில் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 200 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக 85 மில்லியன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கிடைக்கப்பெற்று இருந்தது அதனூடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற வீடு அற்றவர்களுக்கு நிதிகளை வழங்கி அதன் ஒரு பகுதியினை நாங்கள் முடித்து இருக்கின்றோம்.
அதனைப் போன்று "செமட்ட நிவஹச" திட்டத்தின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த கால ஆட்சியாளர் சஜித் பிரேமதாச ஆட்சிக் காலத்தில் பல வீடுகள் உருவாக்கப்பட்டு திட்டங்கள் உருவாக்கப்பட்டு இன்று அது வரும் அடித்தளம் இட்ட நிலையிலேயே தான் காணப்படுகின்றது" என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









