ஐக்கிய நாடுகள் சபை வரை சென்ற கரூர் அவலம்..!
கரூர் பிரசாரக் கூட்டத்தில் நடந்த உயிரிழப்புக்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கூட்டத்தொடரில் உரையாற்றப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் முன்னெடுத்த தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் நெரிசல் காரணமாக 41 பேர் வரை உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தனர்.
இந்த துயர சம்பவம் தொடர்பில் சிலர் தமிழகத்தை ஆளும் திமுக அரசாங்கத்தை குற்றஞ்சாட்டும் அதேவேளை சிலர் தமிழக வெற்றிக் கழக கட்சியினரை குற்றம் சாட்டுகின்றனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இந்நிலையில், கரூர் பிரசாரக் கூட்டத்தில் நடந்த துயர சம்பவம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை கூட்டத்தொடரில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Karur Stampede and Felix Gerald arrest Voiced at The UN Human Rights Council
— Redpix (@redpixnews) October 2, 2025
ஐக்கிய நாடுகளின் மனித உரிமை மன்றத்தில் ஒலித்த கரூர் துயரம் மற்றும் Felix Gerald கைது #tvk #tvkVijay #karurstampede #Un #humanrights #UNHRC #Vijay pic.twitter.com/VgTipIJe5a
இந்த விடயம் சார்பில் ஐ.நா கூட்டத்தொடரில் உரையாற்றியவர், திமுக அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.
திமுக அரசாங்கம் குறித்த பிரசாரத்திற்கு ஏற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், கரூர் விடயம் தொடர்பில் பேசிய ஊடகவியலாளரை கைது செய்தமை தொடர்பிலும் அவர் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



