சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்டவர்களால் பிரதேச செயலாளருக்கு அச்சுறுத்தல்
கிளிநொச்சி கண்டாவளை கனகராயன் ஆற்றுப் பகுதியில் சட்ட விரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு கனரக வாகனங்கள் பிடிப்பட்டதுடன் நான்கு டிப்பர் வாகனங்களின் சாரதிகளால் பிரதேச செயலாளர் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களை அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி கண்டாவளை பிரதேசத்துக்குட்பட்ட கனகராயன் ஆற்றுப் பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு மேற்கொள்வது தொடர்பில் பல்வேறு தரப்பினராலும் முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்ட வருகின்ற நிலையில் இவற்றை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்றைய தினம் (26-07-2023)பிரதேச செயலருக்கு கிடைக்கப்பட்ட
முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த இடத்துக்கு பிரதேச செயலாளர் நேரடியாக
சென்றுள்ளார்.
பிரதேச செயலாளர் மீது அச்சுருத்தல்
இந்நிலையில் குறித்த பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு கனரக வாகனங்களை பிடித்துள்ளதுடன் நான்கு டிபர் வாகனங்கள் குறித்த பகுதியில் இருந்து பிரதேச செயலாக உத்தியோகத்தர்களையும் பிரதேச செயலாளரையும் அச்சுறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் மீட்கப்பட்ட இரண்டு கனராக வாகனங்களும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 22 மணி நேரம் முன்

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
