கமிந்து மெண்டிஸிற்கு சர்வதேச அரங்கில் கிடைத்த அங்கீகாரம்
இலங்கை கிரிக்கெட் அணியின் வளர்ந்து வரும் நட்சத்திர வீரர் கமிந்து மெண்டிஸிற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சிறந்த வீரருக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.
மாதாந்தம் இந்த விருது வழங்கப்பட்டு வரும் நிலையில் இந்த ஆண்டில் இரண்டு தடவைகள் மாதத்திற்கான சிறந்த வீரர் என்ற விருதினை கமிந்து பெற்றுக் கொண்டுள்ளார்.
நான்கு டெஸ்ட் போட்டிகள்
இந்த மாதத்திற்கான சிறந்த வீரருக்கான முன்மொழிவுகளில் இலங்கையின் பிரபாத் ஜயசூரிய மற்றும் அவுஸ்திரேலியாவின் டரவிஸ் ஹெட் ஆகியோரின் பெயர்களும் பரிந்துரைக்கப்பட்டன.

எனினும், கமிந்துவிற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளதோடு கடந்த மார்ச் மாதமும் கமிந்து இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.
இந்த மாதத்தில் கமிந்து நான்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 90.20 என்ற சராசரியுடன் 451 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மாதத்திற்கான சிறந்த ஐ.சி.சி வீரருக்கான விருது வழங்கப்பட்டமை மகிழ்ச்சி அளிப்பதாக கமிந்து மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.
| மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri