களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : பொலிஸாரிடம் சிக்கிய கார்
களுத்துறையில் இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய கார் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
களுத்துறையின் வெட்டுமகடை பகுதியில் இன்று காலை(28.05.2026) மோட்டார் சைக்கிளில் சென்ற நபரொருவர் மீது காரொன்றில் வந்த நபரொருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணை
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி, களுத்துறை, நாகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

அதனையடுத்து, தப்பி ஓடிய சந்தேக நபர்களைக் கைது செய்வதற்கான விசாரணையை பொலிஸார் முன்னெடுத்திருந்தனர்.
அதனையடுத்து, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் பயன்படுத்திய கார், நேபட பிரதேசத்தின் தெபுவன பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கொலைச் சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி, கைவிடப்பட்ட நிலையில் காரினுள்ளிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தெபுவன அஞ்சல் அலுவலகம் அருகே கார் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
துரோகம் செய்தவர்கள் மீதும் அன்பு செலுத்தும் குணம் கொண்ட டாப் 3 ராசிகள் ... இவர்கள் கிடைப்பதே வரம்! Manithan