தேசிய மக்கள் சக்தி வசமான கற்பிட்டி பிரதேச சபை
புத்தளம் மாவட்டத்தின் முக்கிய உள்ளூராட்சி மன்றங்களில் ஒன்றான கற்பிட்டி பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி ஆட்சியை கைப்பற்றியது.
தவிசாளராக தேசிய மக்கள் சக்தியின் அப்துல் சத்தார் மொகமட் றிகாஸ் தெரிவாகியுள்ளார்.
அவருக்கு ஆதரவாக தேசிய மக்கள் சக்தியின் 15 உறுப்பினர்களுடன் மேலதிகமாக ஒரு உறுப்பினரும் ஆதரவளித்த நிலையில், 1 மேலதிக வாக்கினால் அவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
பிரதி தவிசாளர்
பிரதி தவிசாளராக சமன் குமார் ஹேரத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பிரதேச சபையில் எதிர்க்கட்சிகள் பெரும்பான்மையைக் கொண்டிருந்த போதும், எதிர்க்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னொருவர் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்துள்ளதன் காரணமாக தேசிய மக்கள் சக்தி குறித்த பிரதேச சபையைக் கைப்பற்றியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



