அதிரடியாக இடைநிறுத்தப்பட்ட சஜித் கட்சி உறுப்பினர்கள்
ஐக்கிய மக்கள் சக்தியின் தம்புள்ளை பிரதேச சபையின் 6 உறுப்பினர்களின் கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, கையொப்பத்துடன் கூடிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தம்புள்ளை பிரதேச சபையின் தலைவர் மற்றும் துணைத் தலைவரை நியமிப்பதில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி நிர்வாகக் குழு மற்றும் கட்சி செயற்குழுவின் முடிவை உறுப்பினர்கள் பின்பற்றாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர்கள்
இதற்கமைய, சுசில் ஹேரத், அனில் இந்திரஜித் தசநாயக்க, தனஞ்சய சம்பத் கரடகொல்ல, பிரியரஞ்சன குமார ரத்நாயக்க, ஹேரத் முடியன்சேலாகே குமாரி மற்றும் கிருஷாந்தி தில்ருக்சி பிரேமரத்ன ஆகியோரின் பதவி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



