ரணில் – சஜித் கட்சிகள் இணையும் சாத்தியம் அதிகம்! ரஞ்சித் மத்தும பண்டார தகவல்
ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து செயற்படுவதற்குரிய சாத்தியம் உள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார(Ranjith Madduma Bandara) தெரிவித்துள்ளார்.
எவ்வாறு இணைவது என்பது பற்றி ஆராயப்பட்டு வருகின்றது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டணி...
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இரு தரப்பும் இணைந்து செயற்பட வேண்டும் எனக் கட்சி ஆதரவாளர்கள் கோருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தி தற்போது கூட்டணியாகவே செயற்படுகின்றது.
எனவே, இந்த இணைவு பற்றியும் ஆராயப்படுகின்றது. ஐக்கிய மக்கள் சக்திக்கு 45 எம்.பிக்கள் உள்ளனர். மாற்றுக் கட்சிகளுக்குச் செல்ல வேண்டிய தேவைப்பாடு எமக்குக் கிடையாது. எனவே, கூட்டணி பற்றியே கவனம் செலுத்தப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.