தமிழ் தேசிய வரைபடத்தில் இருந்து அகற்றப்படும் தமிழர் பகுதி: சுகாஷ் எச்சரிக்கை
கல்முனை (Kalmunai) வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடக்குமுறைகளை நாம் அனுமதிப்போமேயானால் தமிழ்த் தேசிய வரைபடத்திலிருந்து அம்பாறை (Ampara) மாவட்டம் காணாமல் போகும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் (Sugash) எச்சரித்துள்ளார்.
குறித்த பிரதேச செயலகத்தின் மீதான நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் போராட்டத்தில் கலந்துகொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் 33 ஆண்டுகளாக சுயாதீனமான ஒரு பிரதேச செயலகமாக இயங்கி வருகின்றது.
தற்போது நடைபெறும் கல்முனை வடக்கு பிரதேசத்தின் மீதான நிர்வாக அடக்குமுறையானது அம்பாறை மாவட்டத்தை தமிழ்த் தேசிய வரைப்படத்திலிருந்து அகற்றும் சூழ்ச்சி ஆகும்.
இதற்கு எதிராக தமிழ் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |