யாழில் நெகிழ்ச்சி ஊட்டும் ஒரு குடும்பத்தின் மனிதாபிமான செயல்
யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டையின் (Jaffna) சங்கரத்தை பகுதியில் உள்ள குடும்பம் ஒன்று ஆதரவின்றி தெருவில் திரியும் நாய்களை பிடித்து வந்து பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த பகுதியில் சுமார் 30 நாய்கள் உள்ளதுடன் தாங்கள் வசிக்கும் வீட்டின் ஒரு அறையினை மாத்திரம் தங்களது பயன்பாட்டுக்கு எடுத்துக்கொண்டு மிகுதி வீடு முழுவதையும் நாய்களுக்காக ஒதுக்கியுள்ளனர்.
இவர் ஆரம்பத்தில் தலவாக்கலை பகுதியில் ஆதரவின்றி தவித்த இரண்டு நாய் குட்டிகளை வீட்டுக்கு எடுத்து வந்த நிலையில் கணவனும் மனைவியும் இணைந்து அந்த நாய் குட்டிகளை பராமரித்து பின்னர் வீதிகளில் ஆதரவின்றி திரியும் நாய் குட்டிகளை எடுத்து வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.
இது குறித்து குடும்பத் தலைவர் தெரிவிக்கையில், “வெளிநாட்டு இன நாய்கள் இவ்வாறு தெருவில் விடப்படுவதில்லை. வெளிநாட்டு நாய்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு அநேகமானோர் உள்ளனர். ஆனால் ஊர் நாய்களுக்கு ஆதரவு வழங்குவதற்கு யாரும் இல்லை.
வெளிநாட்டு மிருகங்கள்
இதனால் அவை வீதிகளில் சுற்றித் திரிகின்றன. நாய்களுக்கு அன்பும் உணவும் மட்டுமே தேவை. மனிதர்களைப் போல் அவற்றுக்கு சொத்துக்ககள் எவையும் தேவையில்லை.
சமூகமானது எங்களை பிழைக்க தெரியாதவர்கள்
என்றும் வெளிநாட்டு மிருகங்களை வளர்த்து விற்பனை செய்யலாம் என்று கூறுகின்றனர். ஆனால் அவற்றை எல்லாம் நாங்கள்
பொருட்படுத்துவதில்லை.
நாங்கள் வாடகை வீட்டில் இருந்தே நாய்களை பராமரித்து வருகின்ற நிலையில் நாய்களுக்கான வீடு ஒன்றினை விரைவில் அமைத்து அந்த வீட்டிலேயே இவற்றினை பராமரிப்போம்.
எங்களிடம் வரும் நாய்களை நாங்கள் யாருக்கும் வழங்குவதில்லை. அவற்றினை நாங்களே பராமரித்து வருகின்றோம். எதிர்காலத்தில் எமக்கு நிதி வசதிகள் கிடைத்தால் இதனை விஸ்தரித்து இன்னும் பல நாய்களை பராமரிப்போம்” என்றும் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |