கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்பு
கல்முனை (Kalmuna) வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அத்துமீறி பறிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெறும் மக்கள் நீதிகோரிய போராட்டத்தில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.
குறித்த போராட்டமானது, இன்று (04.03.2024) 11ஆவது நாளாக இடம்பெற்று வரும் நிலையில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் நற்பிட்டிமுனை அம்பலத்தடி பிள்ளையார் ஆலய முன்றலில் இருந்து பொதுமக்களுடன் இணைந்துள்ளனர்.
அதேவேளை, இப்போராட்டத்திற்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன் (Srithara), செல்வராசா கஜேந்திரன் (Selvarasa Kajendiran) மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
கோவிட் காலப்பகுதியில் கட்டாய சடலம் எரிப்பிற்கு மன்னிப்பு கோரும் அமைச்சரவைப் பத்திரம்: அமைச்சர் ஜீவன்
போராட்டத்துக்கு ஆதரவு
மேலும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்குட்பட்ட கிராம மக்கள் நடைபவனியாக வந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அத்துடன், பொது அமைப்புக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலரும் கலந்து கொண்டு போராட்டத்துக்கு ஆதரவை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ட்ரம்ப் - சவுதி மெகா ஒப்பந்தம்... தூக்கம் தொலைத்த இஸ்ரேல்: ஆபத்தான போர் விமானங்கள் விற்பனை News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam