கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: இடைக்கால தடை விதிக்க எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை

M. A. Sumanthiran Sri Lanka Sri Lankan political crisis
By Kumar Oct 06, 2023 11:03 PM GMT
Report

கடந்த 30வருடமாக இயங்கிய ஜனாதிபதியினால் அங்கீகரிக்கப்பட்ட பிரதேச செயலகத்தினை செயற்படவிடாமல் தடுக்கும் செயற்பாடுகளுக்கு இடைக்கால தடையினை விதிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பிலான வழக்கு நேற்று(06.10.2023) கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்த போதே சுமந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில் நேற்று மிகவும் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றதோடு அதில் பல்வேறு விடயங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தெளிவுபடுத்தப்பட்டன.

நீதிபதிகள் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தால் வெடித்தது புதிய சர்ச்சை(Video)

நீதிபதிகள் தொடர்பில் சுமந்திரன் தெரிவித்த கருத்தால் வெடித்தது புதிய சர்ச்சை(Video)

தனிப் பிரதேச செயலகமாக 1989ஆண்டு அங்கீகரிக்கப்பட்டு பிற்காலத்தில் அமைச்சரவை அனுமதியோடு 30வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் அதிகாரங்கள் அரசியல் சூழ்ச்சியால் பறிக்கப்பட்டமை, வெளிப்படை அதிகாரங்கள் நிலை இல்லாமல் அரசியல் இனவாத சூழ்ச்சிக்குள் சிக்கி இருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.நேற்று இடம்பெற்ற வழக்கில் ஜனாதிபதி சட்டத்தரணி .எம் ஏ சுமந்திரன் முன்னிலையாகியிருந்தார்.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: இடைக்கால தடை விதிக்க எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை | Kalmunai North Division Secretariat Issue

இடையீட்டு மனு

இந்த நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை உப பிரதேச செயலகம் எனக் கூறி இடையீட்டு மனுதாரராக நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மற்றும் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கலீயூர் ரஹ்மான் ஆகியோரால் இடையீட்டு மனு இவ் வழக்கில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

சீரற்ற வானிலை காரணமாக ஒருவர் உயிரிழப்பு: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

இடையீட்டு மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா,பைசர் முஸ்தபா ,சஞ்சீவ ஜயவர்தன ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

இந்த வழக்கின் இடையீட்டு மனுதாரர்களின் எழுத்து மூல சமர்ப்பணங்கள் கடந்த 3ம் திகதி முடிவடைந்த நிலையில் நேற்று 6 ஆம் திகதி வாய்மொழி சமர்ப்பணங்களுக்காக நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கான சமர்ப்பணங்கள் சட்டமா அதிபர் சார்பிலும் இடையீட்டு மனுதாரர்களில் சார்பிலும் இடம்பெற்றுள்ளது.

இதில் இடையீட்டு மனுதார்கள் சார்பில் தோன்றிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் முறைப்படி கல்முனை பிரதேச செயலகத்தில்தான் ஆளுகை செய்யப்பட வேண்டும் என வாதங்களை முன்வைத்துள்ளனர்.

மட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு (Photo)

மட்டக்களப்பில் மோட்டார் குண்டு மீட்பு (Photo)

ஆட்சேபனை வாதம்

இதனை தொடர்ந்து குறித்த வழக்கிற்கு ஆட்சேபனை சமர்ப்பணங்களை முன் வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி .எம் ஏ சுமந்திரன் பின்வருமாறு தனது ஆட்சேபனை வாதத்தை முன்வைத்துள்ளார்.

“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் ஒரு பிரதேச செயலகமே அங்கு அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்க முடியாது. வர்த்தமானி இல்லாவிடினும் இலங்கையில் பல்வேறு பிரதேச செயலகங்கள் இயங்குகின்றன.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: இடைக்கால தடை விதிக்க எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை | Kalmunai North Division Secretariat Issue

குறிப்பாக வாழைச்சேனை,கோறளைபற்று மத்தி,நாவிதன்வெளி பிரதேச செயலகம், ஏறாவூர் என பலதை தொட்டு ஆட்சேபனையை தெரிவித்ததோடு தனியான பிரதேச செயலகமாக அங்கீகரிக்கப்பட்டு அமைச்சரவை தீர்மானமும் எடுத்து 30வருடங்களுக்கு மேல் கடந்து விட்டது.

நடைமுறையில் 30வருடங்களுக்கு மேலாக பிரதேச செயலகமாக இயங்கியதை 15க்கு மேற்பட்ட அமைச்சுக்கள் 50க்கு மேற்பட்ட திணைக்களங்கள் ஏற்றுக் கொண்ட விடயத்தினை ஏன் நாட்டின் ஜனாதிபதி தனிப் பிரதேச செயலகமாக  பயன்படுத்தி வழங்கி உள்ளார்?

பிரதேச அபிவிருத்தி தலைவர்கள் நியமிக்கப்பட்டு தனியே பிரதேச அபிவிருத்தி குழு கூட்டமும் நடத்தப்பட்டது. இது முழுமையான பிரதேச செயலகமே இப்போது இதன் அதிகாரம் பறிக்கப்படுகின்றது.

யாழில் இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் (Photos)

யாழில் இலங்கை அணியின் முன்னாள் பிரபல பந்து வீச்சாளர் சமிந்த வாஸ் (Photos)

இந்த நடவடிக்கை  தடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கான தடையுத்தரவுகளையும் வழங்க வேண்டும்.அதனை தொடர்ந்து சட்டபூர்வமான எதிர்பார்ப்பு கீழ் உடனடியாக அதிகாரங்கள் முழுமையாக பிரயோகிக்க செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் கட்டளையாக்க வேண்டும்.” என தனது கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து வழக்கின் வாதப் பிரதிவாதங்களை கேட்ட நீதிமன்றம் தனது இடைக்கால தீர்வு தொடர்பான கட்டளை தொடர்பில் எதிர்வரும் (15.11.2023)அன்று வழங்குவதாக நேற்று(06.10.2023) அறிவித்துள்ளது.

சபை அமர்வின் இடையே திடீரென போராட்டத்தில் குதித்த சாணக்கியன்: வேடிக்கை பார்த்த பிள்ளையான் (Video)

சபை அமர்வின் இடையே திடீரென போராட்டத்தில் குதித்த சாணக்கியன்: வேடிக்கை பார்த்த பிள்ளையான் (Video)

மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Toronto, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, கலிஃபோர்னியா, United States

25 Feb, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US