இலங்கை மத்திய வங்கியின் கொள்கை வட்டி வீதங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள முக்கிய தீர்மானம்
இலங்கை மத்திய வங்கியின் நாணயக் கொள்கைச் சபை, கொள்கை வட்டி வீதத்தை தற்போதைய 8.75% என்ற நிலையிலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பணவியல் கொள்கைக்குழு, நேற்று (22) நடைபெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.
தீவிரமடைந்துள்ள பதற்ற நிலைமைகள்
உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகளில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் எதிர்காலக் கணிப்புகளைக் கவனத்தில் கொண்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் தீவிரமடைந்துள்ள பதற்ற நிலைமைகள் காரணமாக, உலகளாவிய சந்தையில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட பண்டங்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
இந்நிலைமை உலகளாவிய பொருளாதார வளர்ச்சிக்கு எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதுடன், பல்வேறு வழிகளில் இலங்கை பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
உள்நாட்டு எரிசக்தி மற்றும் உணவுப்பொருட்களின் விலை உயர்வின் காரணமாக, இலங்கையில் பணவீக்கம் ஜூன் 2026-ல் ஆண்டு அடிப்படையில் 6.8% ஆக அதிகரித்துள்ளது.