கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் அவசர அறிவுறுத்தல்
நாட்டில் தொடர்ந்து பரவிவரும் டெங்கு காய்ச்சல் காரணமாக, கொழும்பில் உள்ள லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருபவர்களுக்கு வைத்தியசாலை நிர்வாகத்தினால் அவசர அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது சிறுவர் நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் பிரதீப் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
அவசர அறிவித்தல்
இந்த சூழ்நிலையைக்கருத்தில் கொண்டு, குழந்தைகளுக்கு விரைவான மற்றும் திறமையான மருத்துவ சிகிச்சையை வழங்குவதற்கு பெற்றோர்கள் மற்றும் பாதுகாவலர்களின் ஒத்துழைப்பு இன்றியமையாதது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, சிகிச்சை அல்லது மருத்துவ பணிகளுக்காக தங்கள் பிள்ளைகளை வைத்தியசாலைக்கு அழைத்து வரும்போது பின்வரும் ஆவணங்களைக் கொண்டு வருமாறு வைத்தியசாலை நிர்வாகம் பெற்றோர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
முக்கிய ஆவணங்கள்
தனிநபர் சுகாதார எண் (PHN) அல்லது பார்கோடு அட்டை
குழந்தை சுகாதார மேம்பாட்டுக் குறிப்பேடு அல்லது எடை குறிப்பேடு
மருந்து அல்லது உணவு ஒவ்வாமை பதிவேடுகள்
மருத்துவக் குறிப்பேடுகள்
வைத்தியசாலை வெளியேற்ற அட்டைகள் அல்லது நோய் கண்டறிதல் அட்டைகள் என்பனவற்றினை கொண்டு வருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு, லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகத்தை 011 2693711 (307) என்ற எண்ணில் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.