தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை முக்கிய அறிவுறுத்தல்
2025ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான க.பொ.த. உயர் தர புதிய வகுப்புகள் யாவும் எதிர்வரும் மார்ச்-25 ஆம் திகதிக்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கல்முனையில் இயங்கும் தனியார் கல்வி நிலையங்களுக்கு கல்முனை மாநகர சபை அறிவிப்பு வழங்கியுள்ளது.
புதிய வகுப்புகள் தொடர்பில் முக்கிய தீர்மானம்
பெற்றோர்கள் மற்றும் பொது நல அமைப்புகள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக குறித்த மாணவர்களின் நலன் கருதி இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி தெரிவித்துள்ளார்.

க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை முடிந்த கையோடு உடனடியாகவே க.பொ.த. உயர் தரத்திற்கான புதிய வகுப்புகளை ஆரம்பிக்க சில தனியார் கல்வி நிலையங்கள் ஏட்டிக்குப் போட்டியாக முனைவதாக, முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக பல ஆலோசனைகள் கல்வி நிலையங்களுக்கு வழங்கப்பட்ட போதிலும், அதனை பொருட்படுத்தாமல் உதாசீனமாக செயற்படுவதானது கவலைக்குரிய விடயமாகும்.
எனவே, இந்த விடயத்தில் கல்முனை மாநகர சபை இறுக்கமான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளது என்றும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri