வேலைநிறுத்தம் செய்ய கூடாது..! அமைச்சர் லால்காந்த கவலை தெரிவிப்பு
பணிப்பகிஷ்கரிப்பு செய்து கோரிக்கைகளை கோருவது சிறந்த செயற்பாடல்ல என்று கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் லால்காந்த தெரிவித்துள்ளார்.
வடிகாலமைப்பு பொருளியலாளர் சங்கத்தின் வருடாந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கோரிக்கைகள்
தொடர்ந்து பேசிய அவர், ''வடிகாலமைப்பு பொருளியலாளர் சங்கம், நாட்டுக்கு முன்னுதாரணமாக, வேலைநிறுத்தம் செய்யாமல் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குறித்த சங்கம் என்னிடம் பல தடவைகள் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.பின்னர் நாம் ஜனாதிபதியிடமும் பேச்சுவார்த்தைகள் நடத்தினோம். அவர்களின் குறிப்பிட்ட பிரச்சினைகள் ஏற்றுக்கொள்ளக்க கூடியதாகும்.
ஆனால் வைத்தியர்களிடம் உங்களை ஒப்புவித்து பேச வேண்டாம்.வேறுவொரு தொழில்துறையுடன் ஒப்பிடாமல் கணக்கியல் ரீதியில் உங்களின் பிரச்சினைகளை விளக்க முற்படலாம்.
போராட்டங்கள்
கடந்த காலங்களில் அரச சேவையாளர் அதிகம் என ஒரு சிந்தனையை கொண்டு வந்தனர். இரு வருடங்களுக்கு முன்னரும் இது தொடர்பில் பேசப்பட்டது.
ரணில் பிரதமராக இருந்த காலத்தில் கொண்டு வந்த சில திட்டங்களால் அரச பணியாளர்கள் போராட்டங்களை செய்தனர். நாமும் குறித்த போராட்டங்களில் பங்கு பற்றினோம்.
ஆனால் இன்று அத்தியாவசிய வேலைகளுக்கான அரச பணியாளர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நாம் அவற்றை நிர்த்திக்க முயற்சிக்கிறோம்.''என கூறியுள்ளார்.
தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி ஆலயம் சப்பறத் திருவிழா



