ஜேவிபி மீது எவரும், எந்தக் குற்றச்சாட்டையும் சுமத்தமுடியாது : ரில்வின் சில்வா
இலங்கையில் இன்று நாட்டை வறுமையாக்கி, மக்களை வறுமையாக்கி, ஆட்சியாளா்களை பணக்காரா்களாகும் நிா்வாகமே செயலில் உள்ளதாக ஜேவிபி தொிவித்துள்ளது.
இந்தநிலையில், நாட்டில் மாற்றம் வேண்டும் என்ற கோாிக்கை விடுக்கப்படுகின்ற நேரத்தில், ஜேவிபியின் 32 வது காா்த்திகை வீரா்கள் தினம் நினைக்கூறப்படுகிறது என்று கட்சியின் பொதுச்செயலாளா் ரில்வின் சில்வா தொிவித்துள்ளாா்.
ஜேவிபியின் 32வது காா்த்திகை வீரா்கள் தின நிகழ்வின்போது அவா் இந்தக்கருத்தை வெளியிட்டாா்.
இன்று இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வருவதற்கு ஜேவிபியுடன் இணைந்து செயற்படத் தயாா் என்று பலரும் கூறுவது மகிழ்ச்சியை அளிப்பதாக அவா் குறிப்பிட்டாா்
ஜேவிபியின் அரசியல் பயணத்தில் இணைந்துக்கொள்ள மக்கள் முன்வருகின்ற நிலையில் சிலா் சமூக ஊடகங்களில் , 1988, 89 காலங்களில் ஜேவிபியின் செயற்பாடுகள் குறித்து பிழையான தோற்றத்தைக் காட்டுகின்றனா்.
எனினும் இலங்கையில், வெளிநாட்டு இராணுவம் நிலைக்கொள்ளச் செய்யப்பட்ட வேளையில் அதனை எதிா்த்துப்போராடியது ஜேவிபி என்பதை யாரும் சுட்டிக்காட்டுவதில்லை.
அதேபோன்று 1983 ஆம் ஆண்டின் பின்னா் எவ்விதக் காரணங்களும் இன்றி ஜேவிபி ஏன் தடைசெய்யப்பட்டது என்பதை யாரும் சுட்டிக்காட்டவில்லை என்று ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளாா்.
இந்தநிலையில் ஜேவிபியின் ஸ்தாபகத்தலைவா் ரோஹன விஜேவீர உட்பட்டவா்கள் கொல்லப்பட்ட பின்னா், 1990 ஆண்டுக்கு பின் வந்த இதுவரையானக் காலப்பகுதியில் , எவராவது ஜேவிபியின் மீது எந்தக்குற்றங்களையும் சுமத்தமுடியுமா? என்று ரில்வின் சில்வா, கேள்வி எழுப்பினாா்.
1990ஆம் ஆண்டுகளின் பின்னா், ஜேவிபி வன்முறைகளில் இறங்கவில்லை, குற்றங்களில் ஈடுபடவில்லை, வருமானம் ஈட்டவில்லை, திருட்டு-கொள்ளைகளில் ஈடுபடவில்லை.
எனினும் இவை அனைத்தும் செய்து அரசியலுக்காக கொலைகளை செய்தவா்களிடம் ஆட்சி வழங்கப்பட்டுள்ளதாக ரில்வின் சில்வா சுட்டிக்காட்டியுள்ளாா்.
இதற்கு பண்டோரா ஆவணம் ஒரு சான்றாக அமைந்துள்ளது.
இன்றைய ஆட்சியாளா் கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு வருவதற்கு முன்னா் அவா் இலங்கையின் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வருவாா் என்று பலரும் எதிா்பாா்த்தனா்.
எனினும் ஒரு வருடத்துக்குள் அவாின் அரசியல் தோல்விக்கண்டுள்ளது.
அவரே அதனை பல இடங்களில் ஏற்றுக்கொண்டுள்ளதாக ரில்வின் சில்வா குறிப்பிட்டாா்.
இலங்கையில் இரசாயனப்பசளைகளை அகற்றி சேதனப்பசளைகளை அறிமுகப்படுத்தும் அவாின் கனவு, அவசரப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டமையால் தோல்விக்கண்டதாக ரில்வின் சில்வா தொிவித்தாா்.
இதேவேளை கோட்டாபய ராஜபக்ச மாத்திரம் அல்ல, ரணில்,சஜித் அனைவருமே அரசியலில் தோல்விக்கண்டுள்ளனா்.
எனவே இலங்கையில், புதிய மாற்றத்தை ஏற்படுத்த தனித்தீா்மானத்தை எடுப்பதை விட, பொதுத்தீா்மானத்தை எடுக்கவேண்டும்.
இதற்காக அனைவரும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும் என்று ஜேவிபியின் பொதுச்செயலாளா் ரில்வின் சில்வா தொிவித்துள்ளாா்.