உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் உறுதியுரை
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பலியானவர்களுக்கு நீதியை ஈடேற்றுவதற்கான தேசிய மக்கள் சக்தியின் (NPP) உறுதியுரை பேராயர் மல்கம் ரஞ்சித் (Malcolm Ranjith) ஆண்டகையிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த உறுதியுரையானது, இன்று (18.04.2024) முற்பகல் 11.00 மணிக்கு பொரளையில் உள்ள பேராயரின் இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.
கத்தோலிக்க மற்றும் கிறிஸ்தவ அடியார்களை இலக்காகக்கொண்டு 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ஆம் திகதியன்று மிருகத்தனமான தற்கொலை குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
உறுதியுரையின் உள்ளடக்கம்
இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் நிர்க்கதிக்குள்ளானவர்களுக்கும் நீதியை பெற்றுக்கொடுப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கம் முறையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தும் என அந்த உறுதியுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேற்படி தாக்குதலுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் தொடர்புபட்ட நபர்களுக்கு எதிராக முறைப்படி சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்தும் 07 விடயங்களும் அந்த உறுதியுரையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தி, பேராசிரியர் கிறிசாந்த அபேசிங்க, சட்டத்தரணி சுனில் வட்டகல மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |