நாட்டில் விரைவில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு மக்கள் கோருகின்றனர் - ஜேவிபி
நாட்டின் அரசியலில் விரைவில் மாற்றங்களை கொண்டு வருமாறு தமது கட்சியிடம் மக்கள் கோருவதாக ஜேவிபி தொிவித்துள்ளது.
ஜேவிபியின் செயலாளா் ரில்வின் சில்வா இன்று கொழும்பு தெஹிவளையில், கட்சியின் ”கிராமத்தில் ஆரம்பிப்போம்” வேலைத்திட்டத்தின் போது இதனைக் குறிப்பிட்டார்.
கோட்டாபய ராஜபக்சவின் நிா்வாகம் மீது மக்கள் முழுமையான நம்பிக்கையை வைத்திருந்தனர்
எனினும் அந்த அரசாங்கம் அதனை முழுமையாக வீணடித்துள்ளது. மாறிமாறி வரும் அரசாங்கங்களில் தாம் நம்பிக்கை இழந்துள்ளதாக மக்கள் கூறுகின்றனர்.
இந்தநிலையில் அனைத்துப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் வாிசையில் காத்திருக்கும் நிலையை தவிர்க்க மாற்றம் ஒன்று அவசியம் என்று ஜேவிபியின் செயலாளா் ரில்வின் சில்வா தொிவித்தார்.

