தேசிய அரசியலில் சாதிக்க ஜே.வி.பி தமது இடது சாரி கொள்கையை நீக்க வேண்டும்: அப்துல் மஜீத்
நாட்டின் இன்றைய சூழலில் நாட்டை பொறுப்பெடுக்க தயார் என ஜே.வி.பி தலைவர் அநுர குமார சொல்லியிருப்பது மிகவும் தாமதமாக ஏற்பட்ட ஞானம் என ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், “இந்த அறிவு முன்னரே ஏற்பட்டிருந்தால் நாட்டின் ஜனாதிபதியாகவும் பிரதமராகவும் ஜே.வி.பி எப்போதோ வந்திருக்கும்.
தேசிய அரசியல்

சந்திரிக்கா ஜனாதிபதியாக இருந்த போது ஜே.வி.பியினர் அவரது கட்சியுடன் இணைந்து வரலாற்றில் முதல் தடவையாக 30க்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினரை பெற்றனர். சிலர் அமைச்சர்களாகவும் இருந்தனர்.
அதன் பின் அவருடன் முரண்பட்டு ஆட்சியில் இருந்து விலகினர். கூட்டு சேராமல் தனித்து இயங்குவதன் மூலம் தனிக்கட்சியாக ஆட்சியை பிடிக்க முடியும் என கனவு கண்டு கடைசியில் இப்போது மூன்று அமைச்சர்களுடன் உள்ளனர்.
ஒரேயொரு உறுப்பினரான ரணில் விக்ரமசிங்க பிரதமராக இருப்பது ஜனநாயகமா என கேட்டவர்கள் மூன்று உறுப்பினரை மட்டும் கொண்ட ஜே.வி.பியிடம் நாட்டை கொடுப்பது ஜனநாயகமா என கேட்டால் அதற்கு பதில் என்ன?
ஜே.வி.பி கொள்கை

ஜே.வி.பியினரின் அரசியல் என்பது நெளிவு சுளிவு அற்ற இறுகிய போக்காகும். இதற்கு காரணம் அக்கட்சியின் அரசியல் யாப்பாகும். தாம் இடது சாரி (கம்யூனிச) கொள்கை கொண்டவர்கள் என எழுதி வைத்துள்ளதன் விளைவே இது.
ஜே.வி.பினர் நமது நாட்டுக்கு ஏற்ற கொள்கையை வகுத்து, இடது சாரிகள் என்பதை நீக்கி பெரிய, சிறிய கட்சிகளுடனும் கூட்டிணைந்து செயற்படுவதன் மூலமே அவர்களால் தேசிய அரசியலில் சாதிக்க முடியும் என்பதை பல காலமாக நான் சொல்லி வருகிறேன்.
நாட்டை நேசிப்பவர்களாக இருந்தால் தமது இறுக்கமான அரசியலில் இருந்து
இறங்கி அனைவரையும் அரவணைத்து, சிறுபான்மை மக்களின் உரிமைகளை ஏற்றுச்
செல்லும் புதிய பாதைக்கு ஜே.வி.பி வரவேண்டும்.”என தெரிவித்துள்ளார்.
ரவி மோகன் விவாகரத்து வழக்கு.. மாதம் ரூ.40 லட்சம் கேட்ட ஆர்த்தி, நீதிமன்றம் அதிரடி உத்தரவு Cineulagam