நாடாளுமன்றில் போராட்டக்கள பிரதிநிதிகள் மற்றும் சர்வகட்சி தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு
போராட்டக்களத்தின் பிரதிநிதிகளுக்கும் சர்வகட்சி தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா தலைமையிலான இந்த சந்திப்பு நாடாளுமன்ற கட்டிடத்தில் இன்று(12) பிற்பகல் இரண்டு மணியளவில் நடைபெறவுள்ளது.
கலந்துரையாடல்
நாட்டின் முக்கியமான அரசியல் நகர்வுகள் தொடர்பில் இங்கு கலந்துரையாடி இணக்கப்பாடு எடுக்கப்படவுள்ளது.
இந்த சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ள போராட்டக்களத்தின் பிரதிநிதிகள் 25 பேரின் பெயர்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில் ஒரு முஸ்லிம் இனத்தவரும் உள்ளடக்கப்பட்டுள்ளார். ஏனைய 24 பேரும் சிங்கள இனத்தை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது..
பின் தள்ளப்படல்
தமிழ் மக்களின் பிரசன்னம் போராட்டக்களத்தில் குறிப்பிடத்தக்க அளவில் இருந்துள்ளது.
அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் தொடர்பான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள தமிழ் பிரதிநிதிகள் எவரும் உள்ளடக்கப்படவில்லை.



