பொருளாதார வீழ்ச்சிக்கு ஜே.வி.பியும் பிரதான காரணம் - மகிந்தானந்த அளுத்கமகே
நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்தமைக்கு கடந்த 72 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்த அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும் என முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
வன்முறைகள் மூலம் நாட்டின் சொத்துக்களை அழித்த ஜே.வி.பி
நாவலப்பிட்டி பிரதேசத்தில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் உடைந்து போன இங்குருஓய மற்றும் ஹைக்கிரீட் பாலங்களை புதிதாக நிர்மாணிக்கும் பணிகளை நேற்று ஆரம்பித்து வைத்த பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டின் பொருளாதார வீழ்ச்சியடைந்தமைக்கு மக்கள் விடுதலை முன்னணியும் பிரதான காரணம் என்பதுடன் அந்த கட்சியும் அதற்கு பொறுப்புக்கூற வேண்டும்.
வன்செயல் காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடைய செய்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டது.வன்முறைகள் ஊடாக நாட்டின் சொத்துக்களை அழித்தது. அப்படியான கட்சிக்கு எந்த வகையிலும் நாட்டை ஆட்சி செய்ய முடியாது எனவும் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.