ஜனாதிபதி நாங்கள் கூறுவதை கேட்பதில்லை-மகிந்தானந்த அளுத்கமகே
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கூறுவதை செய்யும் நபர் அல்ல என அந்த கட்சியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை கட்டுப்படுத்த முயற்சித்தால் அரசாங்கம் அழிந்து விடும்

ரணில் விக்ரமசிங்கவை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்டுப்படுத்த முயற்சித்தால், அது அரசாங்கத்தின் அழிவாக அமைந்து விடும் எனவும் அவர் கூறியுள்ளார்.
நெருக்கடியில் இருந்து மீளவே நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம். இரண்டு வருடங்களுக்கு அவர் பணியாற்ற தேவையான ஒத்துழைப்பை வழங்குவோம் என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில் அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.
ஜனாதிபதி முட்டாள் அல்ல

மறுபுறம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாங்கள் கூறுவதை கேட்க மாட்டார். எனினும் எங்களுடன் ஒத்துழைப்புடன் வேலை செய்கிறார். அவர் அனுபவமுள்ள அரசியல்வாதி. முன்னாள் பிரதமர்.
நாங்கள் அவரை கட்டுப்படுத்தும் அளவுக்கு அவர் முட்டாள் அல்ல. நாங்கள் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்து, அவரை கட்டுப்படுத்த முயற்சித்தால், அதுதான் அரசாங்கத்தின் அழிவாக இருக்கும் எனவும் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் கூறியுள்ளார்.
பலமான ஒரு அரசின் நேரடி ஆதரவின்றி, தேசிய இன விடுதலை சாத்தியமற்றது! 11 மணி நேரம் முன்
புடின் பயன்படுத்திய ரகசிய ஏவுகணை... 160 ரஷ்ய எண்ணெய், எரிசக்தி வசதிகளைத் தாக்கிய உக்ரைன் News Lankasri
அப்பாவின் கார்பன் காப்பி... ஜாய் கிறிஸில்டாவின் புதிய பதிவு! சிக்கப்போகும் மாதம்பட்டி ரங்கராஜ் Manithan