ஜேவிபி பொது செயலாளரின் கருத்து தமிழர்களுக்கு பெரும் அடி: சிவாஜிலிங்கம் காட்டம்
13 ஆவது திருத்தம் அல்லது அது போன்ற அதிகார பகிர்வு தேவை இல்லை என தெரிவித்த ஜேவிபியின் பொது செயலாளரின் கருத்து தமிழர்களுக்கு வழங்கப்பட்ட முதலாவது அடி என முன்னாள் நாடாளுமன்றம் உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை நேற்று (20.10.2024) இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
கொழும்பை முடக்கி போராட்டம்
“சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்மைகள் கிடைக்கக் கூடாது என்பதற்காக, அதனை எதிர்த்து கொழும்பை முடக்கி போராட்டம் செய்தவர்கள் தான் மக்கள் விடுதலை முன்னணியினர்.
அண்மைய தேர்தலில் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு
செய்யப்பட்டிருக்கின்றார்.
இந்த பின்னணியில் மாற்றம் ஒன்று வரும் என நம்பியவர்களுக்கு, அந்த கட்சியினுடைய பொது செயலாளர் ரில்வின் சில்வா தமிழர்களுக்கு பிரச்சினை இல்லை என கூறுகின்றார்.
பொருளாதார ரீதியாகத்தான் பிரச்சினை இருக்கிறது என்று கூறுகின்றார். இளையோர் இதைப்பற்றி கவலைப்படவில்லை.
இந்த பின்னணியிலேதான் அவருடைய அமைச்சரவையில் இருக்கக் கூடிய அமைச்சர்கள் தெரிவிக்கக் கூடிய கருத்துக்கள் அனைத்தும், ஜனாதிபதியின் கருத்துக்கள்தான்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |