அமெரிக்க நிறுவனத்துடன் உடன்படிக்கை! நீதிமன்றம் சென்ற ஜேவிபி
அமெரிக்க போற்றீஸ் எரிசக்தி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கைக்கு எதிராக இடைக்கால தடையுத்தரவைக்கோரி, ஜேவிபி மனுத்தாக்கல் செய்துள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த உடன் படிக்கையின் கீழ் இலங்கை அரசாங்கம், யுகதனவி மின்சார நிலையத்தின் பங்குகளை பாிமாற்றம் செய்துள்ளமையை ஆட்சேபித்தே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த உடன் படிக்கையின் படி நியூ போற்றீஸ் நிறுவனம், கெரவலப்பிட்டிய மின் வளாகத்திற்கு எரிவாயு விநியோகம் செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது.
310 மெகாவாட் மின்சாரம் தற்போது அங்கு உற்பத்தி செய்யப்படுகின்ற நிலையில் மேலும் 700 மெகாவாட் மின்சாரக் கட்டமைப்புக்கு திட்டமிடப்பட்டுள்ளது, இதில் 350 மெகாவாட் 2023 க்குள் செயல்படத் திட்டமிடப்பட்டுள்ளது.
