ஜே.வி.பியினர் ஹட்டனில் ஆர்ப்பாட்டம்! நால்வர் கைது
சேர் ஜோன் கொத்தலாவ தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை உடன் மீள பெறுமாறு வலியுறுத்தி ஹட்டன் மணிக்கூட்டு கோபுரச்சந்திக்கு முன்பாக ஜே.வி.பியினர் இன்று (08.07.2021) போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது அக்கட்சியின் அரசியல் செயற்பாட்டாளர்கள் நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கோவிட் வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது என அரச தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டம் நடைபெற்ற இடத்துக்கு வந்த பொலிஸார், இவ்விடயத்தை சுட்டிக்காட்டி அதனை நிறுத்துமாறு வலியுறுத்தினர்.
எனினும், போராட்டக்காரர்களால் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டது. இதனால் பொலிஸாருக்கும், அரசியல் செயற்பாட்டாளர்களுக்குமிடையில் கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதனையடுத்து நால்வர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட நால்வரையும் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.












தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

கடையில் ஏற்பட்ட தகராறு, விட்டிற்கு வந்த மனோஜ் செய்த காரியம், அனைவரும் ஷாக்... சிறகடிக்க ஆசை அடுத்த வார புரொமோ Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
