இனப்படுகொலைக்கு நீதி கோரி செம்மணி புதைகுழிக்கு அண்மையில் ஆரம்பமான போராட்டம்!
தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பிற்கான தீர்வானது சர்வதேச நீதிப் பெறிமுறைகள் ஊடாகவே வழங்கப்பட முடியும் என்பதை வலியுறுத்தி இன்றையதினம் வடக்கு கிழக்கு தமிழர் தாயகம் எங்கும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முன்வைக்கப்படும் கோரிக்கை
அந்தவகையில் யாழ்ப்பாணம் செம்மணி புதை குழிக்கு அண்மித்த பகுதியான, நல்லூர் வீதி வளைவு அமைந்துள்ள பகுதியில் இந்த போராட்டமானது சற்று முன்னர் ஆரம்பமாகியுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பதாகைகளை ஏந்தி, இனப்படுகொலைக்கு நீதி வேண்டி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள், சமூக மட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |















அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
